இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் கேரி பேலன்சை அவுட்டாக்கிய டில்ஷான், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 15வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் முரளிதரன் …

வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு …

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமாகிறது. இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சனிக்கிழமை (28) இரவு, ஜெனீவா சென்றடைந்தார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணை பற்றிய அறிக்கை, இந்த …

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார். மேலும் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழகத்தில் 3 …

மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது. 7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை …

நீங்கள் பயன்படுத்தும் கணினியின் செயல்பாடு சில சமயங்களில் உங்களை பொறுமையின் எல்லைக்கு எடுத்துச் செல்லும். கணினியின் செயல்பாடுகளில் Processor மற்றும் RAM முக்கியமானவையாக திகழ்கிறது. இவற்றின் அளவை பொறுத்து கணனியின் செயல்பாடு அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப Processor மற்றும் RAM ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது, கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும். நமது Processor மற்றும் RAM …

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார். 690 மில்லியன் ஒதுக்கீட்டில் 128 அபிவிருத்தி …

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெறும். 109 ஆவது தடவையாக நடக்கும் இந்தப் போட்டிக்கு ‘எயார்ரெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. மைதானத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர். இதுவரை நடந்து முடிந்த 108 போட்டிகளிலும் சென்.ஜோன்ஸ் கல்லூரி …

உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் 22 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் வெலிங்டனில் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் 121 ஓட்டங்களை பெற்றார்.

ஜேர்மனியில் ஆண் செவிலியர் ஒருவர் 200 நோயாளிகளை கொன்ற சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த நீல்ஸ் எச்(Nils H) என்ற நபர் டெல்மன்ஹோர்ஸ்ட்(Delmenhorst) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆண் செவிலியராய் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவருக்கு தானும் மருத்துவராய் திகழ வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்துள்ளது. எனவே மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைகளை தீவிரமாக கவனித்து வந்தவர், அதேபோல் …

திமுக தலைவர் கருணாநிதி தனக்கு மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை என்று பேசியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ள‌து. இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று …

புத்தர் சிலைக்குள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனத்துறவி ஒருவரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்த் நாட்டின் அசென்(Assen) நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் …

சீனாவில் காதலித்த குற்றத்திற்காக, 6 வருடங்களாக மகளை அடைத்து வைத்து விலங்கை போன்று பெற்றோர்கள் துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த ஜாங் கி(Zhang Qi Age – 24) என்ற பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விடயம் பெற்றோருக்கு தெரியவரவே, காதலையும், காதலனையும் மறந்துவிடுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அந்த பெண் இதற்கு மறுத்துள்ளார், இதனைத் தொடர்ந்து …

சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான். ஆனால், சிறு வயதிலேயே வெட்கப்பட ஆரம்பிக்கும் அவர்கள், பெரியவர்கள் ஆகும் போது அது அவர்களுக்கு தயக்கமாக மாறிவிடுகிறது. வீட்டிற்கு யாராவது வந்தால் ஓடிப்போய் ஒழிந்துகொள்ளுதல், வெளி இடங்களுக்கு அழைத்துச்சென்றால் யாரிடமும் சேராமல் ஒதுங்கி இருத்தல் போன்றவைகளை பெற்றோர்கள் சிறுவதிலேயே மாற்ற வேண்டும். மேலும் இவ்வாறு வெட்கப்படும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடனும் மற்றும் இதர மக்களிடமும் …

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் தங்கள் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் அசத்தி வரும் இந்திய அணி, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. அதே சமயம் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வெளிநாட்டு மண்ணில் திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த …

1 2 3 95